பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரம் முழுவதும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பயணிகளின் நலனை முன்னிட்டு திங்கட்கிழமை முதல் காலை எட்டு மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்குகிறது. இந்த முன்பதிவு மையம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும் என்று தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் ரயில் பயணிகள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு மாலை நேரத்திலும் முன்பதிவு செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த வாய்ப்பினை செய்துகொடுத்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ஜெயந்தி, கோட்ட வர்த்தக செயலாளர் மோகனப்பிரியா ஆகியோருக்கு பட்டுக்கோட்டை பகுதி ரயில் பயணிகள் சங்கங்கள், ஓய்வூதியர்கள், வர்த்தக சங்கங்கள், மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.