மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு திமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். அதில், அதிமுகவில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலம், லட்சுமணன், தேமுதிகவில் இருந்து வந்த திருப்பூர் தினேசுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மத்திய மாவட்டத்திற்கு தோப்பு வெங்கடாசலமும், திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு தினேஷ் குமாரும், விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்கு லட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.