மணிப்பூர்: சிஆர்பிஎஃப் வீரர் 2 சக ஊழியர்களை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாம்பெல் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில், சஞ்சய் குமார் என்ற வீரர் தனது துப்பாக்கியால் சக வீரர்கள் இருவரை சுட்டுக்கொன்று தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் மேலும் 8 வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.