நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்குக் கிடைத்திடவும், விவசாயிகள் தங்கள் நெற்பயிரை காலத்தே அறுவடை செய்திடவும் "உழவர் செயலி" கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், 4,505 நெல் அறுவடை இயந்திரங்களையும், 51 வைக்கோல் கட்டும் கருவிகளையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, நெல் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள், உழவர் செயலி மூலம் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறை கேட்டுக்கொண்டுள்ளது.