அளவிற்கு அதிக காபி குடிப்பதால், எலும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சி விடும். இதனால், ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் ஏற்படும். இதில், எலும்பின் அடர்த்தி குறையத் தொடங்கும். இதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படும். காபி குடிப்பது எலும்புகளை பாதிக்கிறது. எனவே, ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டுவலி, முழங்கால் வலி, போன்ற பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.