மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் நாளை (பிப்.,14) தொடங்கவுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து, முக்கிய வீராங்கனை ஆஷா சோபனா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக நுஜாத் பர்வீன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.