மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் தினமும் வேலை நிமித்தமாக பலர் நகருக்குள் வந்து செல்கின்றனர். தினமும் மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு பேருந்து மூலமாக வேலைக்காக செல்கின்றனர். மதுக்கூர் பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரைகள் சேதம் அடைந்ததால் அவை அகற்றப்பட்டன. பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் இடமில்லாமல் சிக்கி தவித்து வந்தனர்.
எனவே பயணிகள் நலன் கருதி ரூ. 37 லட்சம் செலவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. விழாவில் பேரூராட்சி தலைவர் வகிதா பேகம் ஹாஜா முகைதீன், செயல் அலுவலர் கார்த்திகேயன், துணைத் தலைவர் வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.