பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் கீழத் தெருவை சேர்ந்தவர் முகமது அலி (வயது 54) 2 கால்களும் ஊனமான மாற்றுத்திறனாளி. இவர் ஆட்சியர் அலுவலகம் முகப்பில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவருக்கு அறிவுரை கூறிய சக்கர நாற்காலியில் அமர வைத்து ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க வைத்தனர். அதில் கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜா மடம் கிராமத்தில் வசிக்கும் பக்கிரிசாமி சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான அவருடைய அனுபவத்தில் இருந்த 25 சென்ட் தரிசனலத்தை அப்துல் கரீம் மற்றும் அதிராம்பட்டினம் புதுக்கோட்டை உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பணம் கொடுத்து கிரயம்பெற்றேன். தொடர்ந்து கரடு முரடாக இருந்த இடத்தை வெட்டி சமன்படுத்தி விவசாயம் செய்து வந்தேன். என்னுடைய இடத்திற்கு அருகில் இரண்டு நபர்கள் வேலி அமைத்து அனுபவம் செய்து வருகின்றனர். அந்த இடத்திற்காக 25, 000 வாங்கிக் கொண்டு சுப்பிரமணியன் மீண்டும் கிரயப் பத்திரம் எழுதி தந்தார். அந்த இடத்தில் கல் ஊன்றி வேலி அடைத்துள்ளேன். இந்நிலையில் ஏரிப்புறக்கரை பகுதியைச் சேர்ந்த இருவர் என் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டினர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய நிலத்தை மீட்டு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது