அரசு பேருந்து இருசக்கர வாகன மோதி சிறுவன் பலி மற்றொருவர்காயம்

63பார்த்தது
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கரிக்குளம் மெயின்ரோடு பகுதியில் அரசுப்பேருந்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் பலி. மற்றொருவர் படுகாயம் திருவிடைமருதூர் போலீசார் விசாரணை.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பாக்கனாம்தோப்பு பகுதியைச் சேர்ந்த அறிவழகன் மகன் முகிலன் (17) கலியமூர்த்தி மகன் ஆகாஷ் (20) இருவரும் இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்தில் இருந்து வந்த போது கரிக்கும் மெயின் ரோடு பகுதியில் சிதம்பரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் முகிலன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவரான ஆகாஷ் படுகாயத்துடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியான முகிலனின் உடல் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி