பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் நசீர், எஸ்ஐ தனசேகரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெருமாள் கோயில் தெரு, நகராட்சி பள்ளி அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த சரவணன் (47), புனித தாமஸ் பள்ளி அருகே விற்பனை செய்த பேராவூரணியை சேர்ந்த குமார் (45), அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே விற்பனை செய்த டெல்பின் ரமேஷ் (39), ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.