பெண் விவசாயி மின்சார கம்பியை மிதித்ததில்  உயிரிழப்பு

82பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா  மெலட்டூர் அருகே உள்ள நெய்தலூர் கோவில்தெருவை சேர்ந்தவர்  ஜெகதாம்பாள் (65), இவர் சிலருடன் சேர்ந்து வயலில் களை பறிப்பதற்காக  சென்றுள்ளார்.
அப்போது ஒரு வயலில் களை பறித்து விட்டு,   அடுத்த வயலுக்கு களை பறிக்க ஜெகதாம்பாள்  சென்றுள்ளார். அப்போது வயல்வெளி  வழியாக சென்ற மின்கம்பத்தில் இருந்து மின்சார கம்பி ஒன்று அறுந்து கிடப்பது தெரியாமல் ஜெகதாம்பாள் வயலில் இறங்கி மின்சாரக் கம்பியை மிதித்த போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைபார்த்த சக தொழிலாளர்கள் சத்தம் போட்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து மின்சார  வாரியத்திற்கும்,   காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு மெலட்டூர் போலீசார் விரைந்து வந்து ஜெகதாம்பாள் உடலை மீட்டு   அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, மேற்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி