முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் நன்றி

63பார்த்தது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் நன்றி
தமிழ்நாட்டில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு ரூ.10 கோடி மானியத் தொகை ஒதுக்கி இஸ்லாமியர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வந்தோருக்கெல்லாம் வாரி வழங்கும் முதலமைச்சருக்கு மனம் நிறைந்த நன்றி. தந்தை வழியில் தமிழ்நாடு முதலமைச்சரும் பயணிக்கிறார் என்பதை நன்றி உணர்வோடு நினைத்துப் பார்க்கிறோம் என இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் முதலமைச்சரை பாராட்டியுள்ளார்.