மாணவர்களுக்கு விலை இல்லா புத்தக பை எம்எல்ஏ வழங்கினார்

59பார்த்தது
பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை சின்னக்கடைத் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா அவர்களின்
தொகுதி மேம்பாட்டு நிதியில் 9. 81 லட்ச மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை பார்வையிட்டார். மேலும் அப்பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பள்ளியில் நடைபெற்ற காலை வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.  
மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகப் பைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கே. வீ. கலைச்செல்வன்,  
அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், பேரூராட்சி தலைவர் பேரூராட்சி துணை தலைவர் தியாகரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி தலைமை ஆசிரியர் மார்க்கோனி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி