சுந்தரசோழ விநாயகர் ஆலயம் மண்டலாபிஷேக நிறைவு விழா

67பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் சிவ சங்கீதம் பேலஸ் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ சுந்தர சோழ விநாயகர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நிறைவு நாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  
மண்டலாபிஷேக நிறைவு நாள் விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அக்னிஹோமம் வளர்க்கப்பட்டு கணபதி பூஜை, மகாலெட்சுமி பூஜை, உள்பட நவக்கிரக பூஜைகள்  நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், திரவிய பொடிகள் கொண்டு  அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.   இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தொழிலதிபர் உத்தாணி சிவா என்கிற சிவலிங்கம் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி