இரும்புதலை ஸ்ரீ திருலோகநாதசுவாமி கோவில் சித்ராபெளர்ணமி விழா

81பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள 
ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருலோகநாதசுவாமி ஆலயத்தின்
100 வது ஆண்டு சித்ராபெளர்ணமி விழா வெகு விமரிசையாகவும்  கோலாகலமாகவும் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை கோவிலில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு  ஊர் முக்கியஸ்தர்கள். கிராமவாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி,  அம்பாள் சிறப்பு அலங்காரத்தில்  சகல வாத்தியங்கள். மேள தாளங்கள் முழங்கவும் கோலாட்டம், கும்மியாட்டத்துடன் கோவிலில் இருந்து 
பறப்பட்டு  வெண்ணாற்றங்கரையில்  தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சியும்,   அதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள்  திருவீதியுலா காட்சியும். நடைபெற்றது  மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு  வழிபாடுகள்.   பூஜைகளும்
மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து  இரவு  சிறப்பு மெல்லிசை இன்னிசை நிகழ்ச்சியும்   நடைபெற உள்ளது விழாவுக்கான ஏற்பாடுகளை துரைபிள்ளை குடும்பத்தினர். மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி