இரண்டு சக்கர வாகனத்தில் குடை பொருத்தி வலம் வரும் நபர்

60பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா சுவாமிமலை பகுதியை சேர்ந்தவர் எம்எல்ஏ அப்துல் மாலிக். சமூக ஆர்வலரான இவர் இரண்டு சக்கர வாகனத்தின் மீது குடை அமைத்து பாபநாசம் தாலுகா பகுதி முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.   தொடர்ந்து நாளொன்றுக்கு 30-கிலோமீட்டர் தூரம் வரை குறையாமல் பயணம் செய்வதாகவும், ஆன்லைன் மூலமாக இரண்டு சக்கர வாகன கூரையில் பொருத்தக்கூடிய குடையை வாங்கியதாகவும், இரண்டு சக்கர வாகனங்களில் பொருத்துவது எளிதாக இருந்ததாகவும், கோடை காலங்களிலும் மற்றும் கோடைமழை நேரங்களிலும் குடும்பத்துடன் செல்வதற்கு பாதுகாப்பாக இருப்பதாகவும், முன்பக்க கண்ணாடியை தேவை இருந்தால் பயன்படுத்திக்  கொள்வதாகவும் இல்லாவிட்டால் இறக்கி விட்டு விடுவதாகவும், எந்தப் பகுதிக்கு சென்றாலும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருவதாகவும், எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் உடல் வலி தெரிவதில்லை எனவும் அப்துல் மாலிக் பெருமையுடன் கூறினார். இரண்டு சக்கர வாகனத்தின் மேற்கூரை மீது குடை பொறுத்திக் கொண்டு ஹாயாக வலம் வரும் இந்த அதிசய மனிதரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி