ஒரத்தநாடு - Orathanadu

தஞ்சை: நவ. 26-இல் பேரணி.. ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு

தஞ்சை: நவ. 26-இல் பேரணி.. ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு

தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தில்லியில் குறைந்தபட்ச ஆதரவு விலை, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் ஏறத்தாழ ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் உறுதியான போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது, விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு ஓன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாததை நிறைவேற்ற வலியுறுத்தியும், போராட்டத்தின் போது இறந்து போன விவசாயிகள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டியும் போராட்டம் தொடங்கிய நாளான நவ. 26-ஆம் தேதி நாடு தழுவிய பேரணி உள்ளிட்ட இயக்கத்தை அனைத்து தொழிற் சங்கங்களுடன் இணைந்து தஞ்சாவூரில் நடத்துவது என்றும், கோரிக்கைகளை விளக்கி ஒன்றியம், நகரம், மாநகரம் முழுவதும் நவம்பர் 22, 23 ஆம் தேதிகளில் பிரசாரம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சோ. பாஸ்கர் தலைமை வகித்தார். முத்து. உத்திராபதி, என். வி. கண்ணன், காளியப்பன், ஆர். இராமச்சந்திரன். ஆர். வாசு, எம். பழனியய்யா, ஏஐடியூசி நிர்வாகிகள் தி. கோவிந்தராஜன், துரை. மதிவாணன், பி. செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా