மக்கள் கொண்டாடும் திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக கூறியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், “ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூருக்கு செல்லும் வழியில் என்னை பார்த்த மக்கள், இனி எப்போதும் நம்ம ஆட்சிதான், திராவிட மாடல் ஆட்சி சூப்பர். அடுத்ததும் நாமதான், நிச்சயம் 200 தொகுதிகள் ஜெயிப்போம் என்று உத்தரவாதம் அளித்தனர்!” என்று தெரிவித்துள்ளார்.