தமிழக வெற்றிக் கழகத்தில் வழிகாட்டுதல் குழு அமைக்க அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. முதல் மாநாட்டிற்காக தற்காலிக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நிரந்தர அணியை நியமிக்க விஜய் ஆலோசித்து வருகிறார். அதே போல் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக 120 மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.