ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று (நவ,23) எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் 52 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி, 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி 194 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 87 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தமிழர்கள் அதிகம் உள்ள தாராவியில் உள்ள 4 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.