கும்பகோணம் வட்டம், உள்ளூர், ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் குகன் மனைவி வளர்மதி. கூலித் தொழிலாளர்களான இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் மின் கசிவால் அவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.