கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் “ஒளிமின்னியலில் வளையத்தக்க கரிமச்சேர்மங்கள் சார்ந்த பன்மடிக்குறைக் கடத்திகள்” என்ற தலைப்பில் சென்னை அடையாறு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் என். சோமநாதன் அவர்கள் உரையாற்றினார். இயற்பியல், வேதியியல், உயிரிவேதியியல் மற்றும் விலங்கியல் துறை முதுநிலை மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர் தனதுரையில் “செல்பேசிகளை மிகக் குறைவான எடையில் சுருள் வடிவத்தில் செய்ய இயலும் என்றும், காப்புரிமையின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்”.
கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாதவி தலைமையில் நடந்த இக்கருத்தரங்க ஏற்பாடுகளை வேதியியல் துறைத்தலைவர் முனைவர் மா. மீனாட்சிசுந்தரம், தேர்வு நெறியாளர் முனைவர் இரா. சா. சுந்தரராசன், இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் அ. ரூபி ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் சா. சரவணன் கல்லூரி நூலகர் முனைவர் இரா. சங்கரலிங்கம், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.