பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 8 வாரங்களை கடந்துள்ள நிலையில், மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார் வெளியேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரங்களில் தயாரிப்பாளர் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி சுரேஷ், ரியா ஆகியோர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.