ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அளித்த பேட்டியில், "ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அது குறித்து ஆய்வு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.1) நேரில் செல்ல இருக்கிறார். மேலும், அம்மாவட்டங்களில் அமைச்சர்கள் அதிகாரிகள் முகாமிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்" என்றார்.