பாம்புக்கடி மற்றும் இறப்புகளை சட்டத்தின்படி அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உலகில் ஏற்படும் பாம்புக்கடி மரணங்களில் பாதி இந்தியாவில்தான் நிகழ்கின்றன. 2030ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடி மரணங்களை 50 சதவீதம் குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்பு கடிக்கு ஆளாவதாகவும், 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.