சூரத்தைச் சேர்ந்த ‘ஜீரோ கவ் ஃபேக்டரி' என்ற நிறுவனம் விலங்கே இல்லாமல் பாலை உருவாக்கியுள்ளது. 'ஸ்மார்ட் புரோட்டீன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வகப் பாலில் ஆன்டிபயாடிக், கொழுப்பு, ஹார்மோன்கள் போன்ற உடலுக்கு கேடு தரும் எந்தவொரு பொருளும் இல்லை. மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் லோக்டோஸ் என்ற பொருளும் இல்லை. பாலில் காணப்படும் சில புரதங்களை வைத்தே அதே சுவையுடன், மணத்துடன் இந்த பாலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.