ஆதார் ஆணையத்தின் (UIDAI) ஆன்லைன் போர்டல் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதார் கார்டு தகவல்களைப் புதுப்பிக்கலாம். ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்தத் தேதிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல், myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையத்தை பயன்படுத்தி ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மட்டும் திருத்திக்கொள்ளலாம்.