தமிழர் உரிமைகளுக்காக போராடும் கட்சிகளை தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தமிழர் உரிமை காக்கும் கட்சிகளை தரக்குறைவாக விமர்சிப்பதால் நமது தொப்புள் கொடி உறவுகளுக்குள்ளேயே தேவையற்ற மன வருத்தங்களையும், பகைமைகளையும் மட்டுமே உருவாக்கும் இது நமது நோக்கமல்ல. எவர் போற்றினாலும், தூற்றினாலும் நம்முடைய பணியை தமிழ்நாட்டிற்கும், தமிழீழத்திற்கும் மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.