கும்பகோணம் மாநகராட்சியில் துப்புரவு பணி நிரந்தர பணியாளர்கள், தனியார் ஒப்பந்த பணியாளர்கள் என இரு பிரிவுகளாக வேலைபார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று (ஜன.28) சுமார் 150-க்கும் மேற்பட்ட தனியார் துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். மாநகராட்சி சுகாதாரத் துறையினர் கூறுகையில், ஆணையர் விடுப்பில் சென்றுள்ளார், விரைவில் ஊதியம் வழங்கப்படும் என்றனர். துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், ஊதியம் வழங்கும் வரை வேலைக்கு செல்ல மாட்டோம் என்றனர்.