தனியார் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு கட்டுப்பாடு

67பார்த்தது
தனியார் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு கட்டுப்பாடு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கும்பகோணத்தில், தனியார் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதியில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் பொது நடத்தை எப்படி இருக்கவேண்டும். தேர்தல் கூட்டங்கள் நடத்துவது ஊர்வலம் செல்வது தொடர்பான விதிமுறைகள் என்ன வாக்குப்பதிவு நாளில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். வாக்குசாவடியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறை குறித்து தெரிவித்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி