வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வெளி மாவட்ட பக்தர்கள் பாதை யாத்திரை

2586பார்த்தது
கும்பகோணம் திருவிடைமருதூர் ஆடுதுறை வழியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வெளி மாவட்ட பக்தர்கள் பாதை யாத்திரை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆண்டு தரும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வேலூர் காரைக்குடி புதுக்கோட்டை திருப்பத்தூர் தஞ்சாவூர் உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதையா தெரியாத அண்மையில் புறப்பட்டனர்.

இவர்கள் பழங்கால முறைப்படி ஏராளமான மாட்டு வண்டிகள் சிறிய சரக்கு வண்டிகளில் உணவு பொருட்கள் அபிஷேகப் பொருட்கள் எடுத்துக் கொண்டு புதுக்கோட்டை தஞ்சாவூர் புறவழிச்சாலை சாலியமங்கலம் பாபநாசம் கும்பகோணம் திருவிடைமருதூர் ஆடுதுறை வந்து அடைந்தனர் பின்னர் பாதயாத்திரை சென்று இவர்கள் மயிலாடுதுறை வழியாக வைத்தீஸ்வரன் கோவிலை ஏப்ரல் 23 நாளை செவ்வாய்க்கிழமை சென்றடைவார்கள்.

அங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தரிசனம் முடித்து அனைவரும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள். பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு வழிகளும் உள்ளூர் பக்தர்களால் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி