அரசு உத்தரவை மீறி செயல்பட்ட மாட்டிறைச்சி கடைகள்

28473பார்த்தது
அரசு உத்தரவை மீறி செயல்பட்ட மாட்டிறைச்சி கடைகள்
நாடு முழுவதும் நேற்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் நேற்று
இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்துமே விடுமுறை செய்து மூடப்பட்டிருந்தன. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மதுரை வைகை ஆற்றின் கரையில் காயிதே மில்லத் நகரில் அமைந்துள்ள மாட்டிறைச்சி கடையில் அரசின் உத்தரவை மீறி கடை திறந்து இறைச்சி வியாபாரம் நடைபெற்றது.

மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு சித்திரை திருவிழா பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசின் இந்த உத்தரவை மீறி செயல்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதே போல் பல்வேறு இடங்களில் இறைச்சி கடைகளில் ஷட்டர்களை கொஞ்சமாக மூடி வைத்து, கோழி இறைச்சி விற்பனை செய்தனர். டாஸ்மாக் மதுபாட்டில்களை சனிக்கிழமையே அதிகளவில் வாங்கி வைத்து நேற்று சட்டவிரோதமாகவும் விற்பனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி