தஞ்சை: ராதாகிருஷ்ணன் ஸ்தபதிக்கு பத்மஶ்ரீ விருது அறிவிப்பு

55பார்த்தது
தஞ்சை: ராதாகிருஷ்ணன் ஸ்தபதிக்கு பத்மஶ்ரீ விருது அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் ஸ்தபதிக்கு மத்திய அரசு பத்மஶ்ரீ விருதை அறிவித்துள்ளது. சுவாமிமலையில் வசிப்பவர் தேவசேனா ஸ்தபதி மகன் தே. ராதாகிருஷ்ணன் ஸ்தபதி (65) இவருக்கு மத்திய அரசு பத்மஶ்ரீ விருதை அறிவித்துள்ளது. ஜி.20 மாநாடு புதுதில்லியில் நடந்தபோது மாநாட்டு மண்டபத்தின் முன்புறம் 27 அடி உயரத்திலான ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர் சிலையை செய்ததற்காக பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தே. ராதாகிருஷ்ணன் ஸ்தபதி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி