கும்பகோணத்தில் உலக நன்மைக்காக ஆயிரத்து எண்ணூற்று எட்டு தேங்காய் உடைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பகவத் விநாயகர் கோயில் தை கடைசி வெள்ளியை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு அபிஷேகம் செய்து 1008 தேங்காய் சிதறு காய் உடைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்மீக சேவையாளர் விஷ்ணுபாலாஜி செய்தார்.