புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக மையக் கட்டிடம் திறப்பு

72பார்த்தது
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2022-2023), கும்பகோணம் மாநகராட்சி, கடலங்குடி தெருவில், 41 வது வார்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக மையக் கட்டிடத்தை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு. ப. தமிழழகன் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர் தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி இரா. தெட்சிணாமூர்த்தி, மாநகர அவைத் தலைவர் சு. வாசுதேவன் துணைச் செயலாளர் ப்ரியம் ஜெ. சசிதரன் பொருளாளர் எஸ். ரவிச்சந்திரன் துணைச் செயலாளர்கள் எஸ். சிவானந்தம் , டி. செந்தாமரை
மண்டல குழு தலைவர்கள் பாபு (எ) இரா. நரசிம்மன் கே. என். எஸ். ஆசைதம்பி , ஜெ. மனோகரன் , பகுதி கழக செயலாளர்கள் மு. கண்ணன் , இரா. கல்யாணசுந்தரம் டி. வி. கிருஷ்ணமூர்த்தி , இரா. செல்வராஜ். நிலைக் குழு தலைவர்கள் டி. ஆர். அனந்தராமன் , ஆர். முருகன் ச. பார்த்திபன் அவ மாமன்ற உறுப்பினர் கீதப்பிரியா விஜயகுமார் வட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி