அஜித் - விஜய் நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் பரம எதிரி போல சமூகவலைதளங்களில் மோதிக்கொள்கின்றனர். அந்த வகையில் #காலமானார்_விஜய் #காலமானார்_அஜித் என்ற மோசமான ஹேஷ்டேக்கை எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். தேவையில்லாத விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என அஜித் அண்மையில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருந்த நிலையில் ஹேஷ்டேக் மூலம் இருதரப்பு ரசிகர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது.