குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்

75பார்த்தது
குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்
உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரரை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், அவரை நேரில் அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன், விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பில் குகேஷின் பெற்றோரும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி