மதுராந்தகம் அருகே நடந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்த கார் மீது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் கணபதி, பாலா (10), ஹேமா (13) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஜெயா, சரண்யா, தியா (3) ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.