தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை. அந்த நிதி தற்போது புதுமைப் பெண் திட்டமாக வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி இருப்பதாக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், 'நாட்டுக்கு என்ன தேவையோ அதை அதற்கேற்ப மேம்படுத்தி கொள்வது தான் முதிர்ச்சி அடைந்த சமூகத்திற்கான அடையாளம்' என்றார்.