பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி

56பார்த்தது
கேரளாவின் கொச்சி அருகே திருப்புனித்துறையில் உள்ள பட்டாசு சேமிப்பு கிடங்கில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் சூரக்காடு பகுதியில் உள்ள புதியகாவு கோவிலுக்கு அருகில் காலை 11 மணியளவில் நடந்துள்ளது. விபத்தில் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். கோவில் திருவிழாவுக்காக பட்டாசுகளை சேமித்து வைப்பதற்காக கிடங்கு தயார் செய்யப்பட்டது. லாரியில் இருந்து பட்டாசுகளை அருகில் உள்ள கான்கிரீட் கட்டிடத்திற்கு மாற்றும் போது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் உள்ள 20 வீடுகள் சேதமடைந்தன. தீ மளமளவென அருகில் உள்ள கடைகள் முழுவதும் பரவியது. மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி