ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை - இபிஎஸ் கருத்து

74பார்த்தது
ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை - இபிஎஸ் கருத்து
ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை; ஊசிப்போன உணவு பண்டம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு பிறகு தலைமைச் செயலக வளாத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், 'மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை. தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரை, உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன உணவு பண்டம். ஆளுநர் தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக அவரிடம்தான் கேட்க வேண்டும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை' என்றார்.

தொடர்புடைய செய்தி