சபாநாயகர் வரம்பு மீறி பேசிவிட்டார் - நயினார் நாகேந்திரன்

58பார்த்தது
சபாநாயகர் வரம்பு மீறி பேசிவிட்டார் - நயினார் நாகேந்திரன்
சட்டப்பேரவையில் ஆளுநர் மரபுப்படிதான் நடந்து கொண்டார் என பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அவையை விட்டு வெளியேறிய பிறகு இன்றைய அலுவல்கள் முடிந்தது. தொடர்ந்து தலைமைச் செயலக வளாத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், 'சட்டப்பேரவையில் ஆளுநர் மரபுப்படியே நடந்து கொண்டார். அவர்கள்தான் மரபுப்படி நடக்கவில்லை. சபாநாயகர் வரம்பு மீறி பேசி, நிதி கேட்டுள்ளார். கோட்சே, சாவர்கர் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் மரபுக்கு மீறி தேவையற்ற விஷயங்களை பேசியதால் ஆளுநர் அவையில் இருந்து வெறியேறினார். பேரவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடுவதில் என்ன தவறு உள்ளது? முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை ஏற்றிருக்கலாம்' என்றார்.

தொடர்புடைய செய்தி