மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த கணவன்

565பார்த்தது
மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த கணவன்
புதுச்சேரி காமராஜர் தொகுதி வெங்கடேஸ்வரா நகர், பொறையார் குளம் பகுதியில் வசித்து வந்த தம்பதியர் விக்னேஸ்வரன் (47), இவரது மனைவி இந்துமதி (37). மனைவியின் மீது இவருக்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், வீட்டில் இருந்த கத்தியை கொண்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கோரிமேடு காவல்நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி