பிப்ரவரி 22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர்

78பார்த்தது
பிப்ரவரி 22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர்
பிப்ரவரி 22ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை பிப்ரவரி 13,14 ஆகிய 2 நாட்கள் ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 15ஆம் தேதி தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கப்படும். தொடர்ந்து, பிப்ரவரி 20ஆம் தேதி 2024 -25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 21ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும். 22ஆம் தேதி பதிலுரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி