தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை புறக்கணித்த நிலையில், அதனை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார். இறுதியில் பேசிய அப்பாவு, தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் குறைவாக வாசித்தார்கள். அதனை நான் குறையாகச் சொல்லவில்லை. மிக உயரிய பதவியில் இருக்கும் ஆளுநரை, இந்த அரசு, முதலமைச்சர், அமைச்சர்கள் என எத்தனையோ கருத்து கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், மாண்போடு நடத்துவதுதான் தமிழ்நாடு அரசின் பண்பு. பல லட்சம் கோடி நமது பிரதமர் கேர் நிதியில் உள்ளது. ஒரு 50 ஆயிரம் கோடியையாவது கேட்டு வாங்கித்தாருங்கள். சாவர்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு சட்டமன்றமும் சரி எனக்கூறினார். தொடர்ந்து ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்.