தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ஆறுமுகத்தாய் (63). இவரது வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக வந்த தகவலையடுத்து,
புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து கஞ்சா செடியை போலீசார் பறிமுதல் செய்தனர்.