பொதுக்கூட்ட மைதானத்தை பார்வையிட்ட வேட்பாளர் மற்றும் எம்எல்ஏ

55பார்த்தது
பொதுக்கூட்ட மைதானத்தை பார்வையிட்ட வேட்பாளர் மற்றும் எம்எல்ஏ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணி சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் அதிமுக கூட்டணியின் தென்காசி தொகுதி வேட்பாளர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் கூட்ட மைதானத்தை நேற்று மாலையில் ஆய்வு செய்தார்.

அப்போது தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி குட்டியப்பா, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, வேட்பாளர் கிருஷ்ணசாமி, மற்றும் பாப்புலர் முத்தையா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி