சங்கரன்கோவில் - Sankarankovil

தென்காசி: அமைச்சர் சிவசங்கரிடம் திமுக முக்கிய கோரிக்கை

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன், நேற்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: - தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தலைநகராக விளங்கும் ஆலங்குளம் பேரூராட்சியானது  நகராட்சியாக வளர்ந்து வரும் பகுதியாகும். ஆலங்குளத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே போக்குவரத்து பணிமனை அமைக்கப்பட இருக்கிறது என்று பேசப்பட்டு பின்னர் அது திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்கு மாற்றப்பட்டது. தற்போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் என நான்கு அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இந்த 4 பணிமனைகள் மற்றும் திருநெல்வேலி மற்றும் பாபநாசம் பணிமனை ஆகியவற்றில் இருந்து   ஆலங்குளத்திற்கு  இயக்கப்படும்  பேருந்துகள் இரவில்  பயணிகளை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு  பணி முடிந்து இரவில் தொலை தூரத்தில் உள்ள அந்தந்த   பணிமனைகளுக்கு பேருந்தினை நிறுத்த கிளம்பி செல்கிறது. இதனால் அரசுக்கு எரிபொருள் செலவும் காலவிரயமும்  ஏற்படுகிறது.  ஆலங்குளம் பகுதியில் போக்குவரத்து பணிமனை அமைவதற்கான இடவசதி உள்ளது. எனவே ஆலங்குளம் பகுதியில் போக்குவரத்து பணிமனை அமைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்

தென்காசி
தென்காசி: அமைச்சர் சிவசங்கரிடம் திமுக முக்கிய கோரிக்கை
Apr 03, 2025, 02:04 IST/சங்கரன்கோவில்
சங்கரன்கோவில்

தென்காசி: அமைச்சர் சிவசங்கரிடம் திமுக முக்கிய கோரிக்கை

Apr 03, 2025, 02:04 IST