செங்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆ. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மத்திய அரசு கொண்டு வர இருக்கும், வழக்கறிஞர் சட்ட திருத்த
மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்,
மேலும் எந்த கால கட்டத்திலும்
வழக்கறிஞர் நலனுக்கு எதிரான, வழக்கறிஞர்களின் குரல் வளையை நசுக்குகின்ற, வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக, வழக்கறிஞர்களின் உரிமையை பாதிக்கின்ற இது போன்ற சட்ட திருத்த மசோதாவை எந்த கால கட்டத்திலும் அமுல்படுத்தக் கூடாது என்பதனை வலியுறுத்தியும்
இன்று 21. 02. 2025 வெள்ளிக்கிழமையன்று ஒரு நாள் மட்டும் நீதிமன்ற பணிகளில் இருந்து நாம் விலகி இருப்பதென ஏகமன தாக முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே வழக்கறிஞர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.