தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் நகராட்சி அலுவலகம் முன்பு இஸ்திரி தொழிலாளி அய்யனார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது தனியார் பள்ளி வாகனம் மீது லேசாக மோதிய நிலையில் அவர் என்ன என்று கேள்வி கேட்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டது.
தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் ஒருவர் மற்றும் வண்டியில் வந்த மற்றொருவர் வண்டியில் இருந்து இறங்கி சாலையின் ஓரமாக இஸ்திரி தொழிலாளியை கைகளால் தள்ளி கற்களால் தாக்கியதில் தொழிலாளி அய்யனார் மூக்கு, வாய், உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்து தொடர்ந்து அவரை காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இஸ்திரி தொழிலாளியை சரமாரியாக தாக்கி விட்டு தனியார் பள்ளி வாகனத்தில் தப்பி ஓடிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.